Tuesday, June 16, 2009

543. ஒரு சுயபுராண கேள்வி-பதில் ஆட்டம்

நண்பர் "ஜூனியர்" சொக்கன் அவர்களின் அழைப்பின் பேரில், இந்த சங்கிலித் தொடர் "ஜோதியில்" ஐக்கியமாகிறேன் :)

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

இது (என்றென்றும் அன்புடன் பாலா அல்லது எ.அ.பாலா) என்ற பெயர் நானே தேர்ந்தெடுத்தது தான். பிடிக்காமல் தேந்தெடுப்பேனா என்ன ? விசேஷ காரணம் எதுவும் இல்லை. பாலகுமாரன், "என்றென்றும் அன்புடன்" என்று கையெழுத்திடுவார். அது பிடித்திருந்ததால், எ.அ.பாலா என்ற திருநாமம் சூட்டிக் கொண்டேன். பலவகைப்பட்ட பாலாக்கள் தமிழ் வலையுலகில் இருந்ததால், பாலாவுக்கு prefix தேவையாக இருந்தது! மேலும், "வெறும் பாலா" என்று வைத்துக் கொள்ள முடியாது இல்லையா ? :-)

2) கடைசியா அழுதது எப்போது?

சமீபத்தில்: ஒரு விபத்து ஒரு மரணம் ஒரு பேரிழப்பு

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

ஒரு காலத்தில் (பள்ளி நாட்களில்) பிடித்திருந்தது. எழுதும் பழக்கம் குறைந்து விட்டதால் (எல்லாம் கணினியில் தட்டச்சு தானே), நிஜமான கையெழுத்து விகாரமாகி விட்டது :)

4) பிடித்த மதிய உணவு?

அப்படி எதுவும் கிடையாது. I am generally a very poor eater and not interested in any particular type of food.

5) நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?

நான் சோசியபிள் (கொஞ்சம் extrovert) டைப் தான். எளிதாக பழகி விடுவேன். அதனால், வலியச் சென்று பேசுவது எனக்குப் பிரச்சினை இல்லை. ரொம்பப் பிரபலம் இல்லாதவரை தயங்கவே மாட்டேன்.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?

நிச்சயம் அருவி தான். குரங்கு நீர்வீழ்ச்சிக் குளியல் மறக்க முடியாத அனுபவம்.

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

அந்த ஒருவர் ஆணா, பெண்ணா என்பதைப் பொறுத்து ;-) (ஒரு பதிலாவது குமுதம் அரசு டைப்பில் இருக்க வேண்டாமா? :) )

8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடிச்ச விஷயம்: எளிதில் எளியவரிடம் மனமிரங்கும் சுபாவம். இது, உதவி செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தைத் தருகிறது. மற்றொன்று, என்னுடன் பழகும் / பேசும் எல்லாரையும் முக்கியமாக என்னில் எளியவரை எவ்வித மனத்தடையும் இன்றி சகஜமாக உணர வைக்க முயற்சிப்பது.

பிடிக்காத விஷயம்: மறதி, முன்கோபம் (2வது பொண்ணு பிறந்த பிறகு பரவாயில்லை :))

9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?

என்னைப் பற்றி OK, ஆனால், இப்படி பொதுவில் (அவரைப்பற்றி) சொல்வதை என் மனைவி விரும்புவாரா என்று தெரியவில்லை. அதனால் மன்னிக்க.

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

#2ல் சொன்ன என் அருமையான மருமகன் :(

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?

பிரவுன் கலர் கால்சராய், லாவண்டர் கலர் சட்டை !

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

Nothing

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

பச்சை, எனக்குப் பிடித்த கலர்

14) பிடித்த மணம்?

மழை பெய்வதற்கு முன் வீசும் மண்ணின் மணம், ரத்னா கபே சாம்பார் மணம்...

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?

"உருப்படாதது" நாராயண்: வாசிப்பனுபவம் மிக்கவர், ஆல்ரவுண்டர், பழக இனிமையானவர்

பெனாத்தல் சுரேஷ் : நல்ல நண்பர், பேச்சில் நகைச்சுவை மிளிரும், கிரியேடிவ் !

சுரேஷ் கண்ணனை ஸ்ரீதர் நாராயணன் ஏற்கனவே அழைத்து விட்டார்! நான் மிகவும் ரசிக்கும் எழுத்துகளுக்குச் சொந்தக்காரர், உலக சினிமா பற்றிய தீர்க்கமான பார்வை/அறிவு உடையவர்.

டோண்டு ராகவன் கடும் உழைப்பாளி, மன உரம், வாசிப்பனுபவம் மிக்கவர். "சமீபத்தில்" இவருக்கு தமிழ் வலையுலகை அறிமுகப்படுத்தி பாராட்டும், வசவும் ஒரு சேர வாய்க்கப் பெற்றேன் ;-)

Blogeswari விளம்பரத் துறையில் இருக்கிறார். நகைச்சுவை உணர்வு மிக்கவர். "தங்கிலீஷ்" பிளாக் வைத்திருக்கிறார் :-)

16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

இத்தனை பெரிய எழுத்தாளர் ( சொக்கன்) எழுதியதில் பிடித்தது எது என்று கேட்டால் எப்படி பதிலளிப்பது ? ;-) அவரை ஜூனியர் என்று அழைப்பது, அவர் ஜிசிடி கல்லூரியில் எனது ஜூனியர் என்பதால் மட்டுமே, மற்றபடி நான் சாதாரணன் :) சீரியசஸாக, அவ்ரது எழுத்துத் திறமையை, உழைப்பை பாராட்டுகிறேன்.

17) பிடித்த விளையாட்டு?

அந்த எழவு தான் உலகத்துக்கே தெரியுமே !!

18) கண்ணாடி அணிபவரா?

ஆமாம்

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?

நான் பெரிய அளவில் உலகத் திரைப்படம் எல்லாம் பார்க்கும் ஆள் கிடையாது, நண்பர் சுரேஷ் கண்ணனைப் போல! அவ்வப்பொழுது World Movies சேனல் பார்ப்பேன். சமீபத்தில் பார்த்த ஆம்புலன்ஸ் என்ற ஹாலந்து நாட்டுப் படமும், மாண்டரின் மொழிப் படமொன்றும் நன்றாக இருந்தன.

ஆங்கிலத்தில், ஆக்ஷன், சஸ்பென்ஸ்/ஹாரர் படங்கள் பார்ப்பேன். தமிழில், பசங்க, சுப்ரமணியபுரம் மாதிரியான வித்தியாசமான திரைப்படங்கள் + எல்லா ரஜினி திரைப்படங்களும் :)

20) கடைசியாகப் பார்த்த படம்?

பசங்க (தியேட்டரில்)

21) பிடித்த பருவ காலம் எது?

சென்னையில் இருக்கிறவனிடம் இது என்ன டுபாக்கூர் கேள்வி ? ;-)

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

வாசிப்பது குறைந்து விட்டது! சமீபத்தில் வாசித்தவை: A prisoner of birth (Jeffrey Archer), Freakonomics (Steven Levitt), The AlChemist (Paulo Coelho), வாசிப்பது: Dharmo Dynamics (Woody Prieb )

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

இப்போது மாற்றுவதில்லை. (ஒரு ஆப்பிரிக்கப் பாறையின் மேல் சீட்டாவும் (cheeta) அதன் 4 குட்டிகளும்)

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்தது: அலையோசை, மழையோசை
பிடிக்காதது: வெடிச்சத்தம், இரவில் நாய் குரைக்கும் சத்தம்

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?

இந்தியாவுக்குள் தேராதூன், வெளியே, Denver(US), Ottawa(Canada), Haifa(Israel), Abudhabi

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

தெரியலியேப்பா! (நாயகன் கமலஹாசன் குரலில் படிக்கவும்), Jack of many trades, master of none ! சிறு வயதில் முறையான இசைப் பயிற்சி பெற முடியாமல் போனது வருத்தமே (குரல் வளம் இருந்தது!)

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

பகற்கொள்ளையடிக்கும் பெரிய கடைகளில் பேரம் பேசாமல் பொருட்களை வாங்கும் நபர்கள், ரோட்டில் விற்பவரிடம், எட்டணாவுக்கும், ஒரு ரூபாய்க்கும் மல்லு கட்டும் கேவலமான செயல்!

எங்கும் எதிலும் ஊழல் (பிணத்திலும் பணம் பார்க்க அலையும் இரக்கமற்ற கூட்டம்)

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

(சில சமயங்களில்) கோபத்தில் வார்த்தையை விடுவது, கொஞ்சம் பொறாமை, இன்னும் நிறைய...

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

பேங்காக் (காரணம் கேக்க மாட்டீங்க இல்ல ;-) ), இனிமேல் தான் போகணும் :)

30) எப்படி இருக்கணும்னு ஆசை?

இன்னும் கொஞ்சம் மனுஷனாக, எல்லா விஷயங்களிலும் !!!

31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

டிவியில் கிரிக்கெட் + சரக்கு ;-)

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க

பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில் படும் அல்லல்....

எ.அ.பாலா
15 06 2009

13 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test !

dondu(#11168674346665545885) said...

அழைப்பிற்கு நன்றி பாலா அவர்களே, ஆனால் ஏற்கனவே இன்னொரு பதிவர் இந்த விளையாட்டுக்கு அழைத்த போது இந்த சங்கிலியை தொடர விருப்பம் இல்லாது எனது இயலாமையை தெரிவித்து விட்டேன். இப்போதும் அதே பதில்தான். மன்னிக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஸ்ரீ.... said...

என்ன ஆச்சு? எங்க போய்ட்டீங்க? ரொம்ப நாளா எழுதல.

ஸ்ரீ....

said...

ரொம்ப இயல்பான, சுவாரஸ்யமான பதில்கள் :) அழைப்பை ஏற்று எழுதியதற்கு நன்றி சீனியர் :)

- என். சொக்கன்,
பெங்களூர்.

மதிபாலா said...

நல்ல சுயபுராணம்.


நிச்சயம் அருவி தான். குரங்கு நீர்வீழ்ச்சிக் குளியல் மறக்க முடியாத அனுபவம்.//

ஆழியாறா ?

பிச்சைப்பாத்திரம் said...

//ஒரு ரூபாய்க்கும் மல்லு கட்டும்//

nice. well written.

enRenRum-anbudan.BALA said...

ராகவன் சார்,

சரியான காரணமின்றி நிராகரித்ததை ஏற்க முடியவில்லை. நீங்கள் எழுதினால் சுவாரசியமாக இருக்கும். பதியவும். தமிழ் வலையுலகை உங்களுக்கு கை காட்டினவன் என்ற உரிமையில் கேட்கிறேன். நன்றி.

ஸ்ரீ,
நன்றி விசாரிப்புக்கும், வருகைக்கும்.

மனதைச் செலுத்தி பதிவுகள் எழுத முடியவில்லை.

enRenRum-anbudan.BALA said...

ஜூனியர்,

நன்னி. நீங்கள் கேட்டு மறுக்க முடியுமா, சொல்லுங்கள் :)
**********************************
மதிபாலா,
நன்றி. குரங்கு நீர்வீழ்ச்சி ஆனைமலையில் உள்ளது. பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் பயணிக்க வேண்டும்.

http://en.wikipedia.org/wiki/Monkey_Falls
*******************************
சுரேஷ் கண்ணன்,

வாங்க.

////ஒரு ரூபாய்க்கும் மல்லு கட்டும்//

nice. well written.
//

உங்கள் கண்ணில் சரியான விஷயங்கள் படும் என்று எனக்குத் தெரியாதா ? ;-)

dondu(#11168674346665545885) said...

ஓக்கே பாலா அவர்களே. என்னை உரிமையாகக் கேட்டதற்கு மகிழ்ச்சி. கண்டிப்பாக பதிக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Sridhar V said...

//பேங்காக் (காரணம் கேக்க மாட்டீங்க இல்ல ;-) ), இனிமேல் தான் போகணும் :)//

//கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?//

நீங்க காரணம் சொல்லலைன்னா என்ன... நாங்களே கண்டுபிடிச்சுருவோம்ல.

இந்தக் கேள்விக்கும் முந்தைய பதிலுக்கும் எதுவும் சம்பந்தம் இருக்கா? :))

dondu(#11168674346665545885) said...

பதிவு போட்டு விட்டேன், பார்க்க: http://dondu.blogspot.com/2009/06/32.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

enRenRum-anbudan.BALA said...

ஸ்ரீதர் நாராயணன்,

நன்றி.

//நீங்க காரணம் சொல்லலைன்னா என்ன... நாங்களே கண்டுபிடிச்சுருவோம்ல.
//
"பத்த வச்சுட்டியே பரட்டை" என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன் :)

டோண்டு சார்,
நன்றி.

passerby said...

//அது பிடித்திருந்ததால், எ.அ.பாலா என்ற திருநாமம் சூட்டிக் கொண்டேன்.//

சரியாப்போச்சு!

திருநாமம் - என்று மத்தவா உங்களைச் சொல்லனும்.

எழுதியபின்னர் ஒருவிசைக்கும் இன்னொரு விசை படித்துப்பார்த்து ‘க்ளிக்’ செய்யுங்கோ!

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails